Privacy & Cookie Policy

சிறந்த, உயர்தர மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அறிவியல்சார் அரச அமைப்பான அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனமான (SPMC) நாம் இலங்கையர்களுக்கு பொருளாதார ரீதியாக பொருந்தக்கூடிய விலையில், தனித்துவமான, உயர்தர மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள வழி வகுக்கின்றோம். மருந்துகளுக்கான உலக சுகாதார தாபனத்தின் நியமங்கள் மற்றும் தரநிலைகள் உட்பட சர்வதேச தரத்திற்கு இணையாக எமது மருந்துப் பொருட்கள் நவீன தொழிநுட்பவசதிகளுடன், சிறந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆய்வகங்களில் சிறந்த தர மேற்பார்வையின் கீழான உற்பத்தி வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆராய்ச்சிக் கலாச்சாரம் மற்றும் சிறந்த ஜப்பானிய தொழில்நுட்பத்துடனான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கீர்த்தி மீதான முதலீட்டுடன் எமது வெளியீட்டின்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிற்குமான சிறந்த தரம்வாய்ந்த, காலத்திற்குசிதமான மருந்துப் பொருட்களை மட்டுமே வழங்குவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் இன்று அ.ம.உ.கூ. மிக உயர்ந்த அடைவுகளை தொடர்வதற்கு நிலையாக கால்பதித்துள்ளதோடு உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி உள்ளிட்ட எமது பல்தரப்பு திணைக்களங்களின் , மென்மையான பொறிமுறை இணைப்பு என்பவற்றில் தலைநிமிர்ந்து இருப்பது மிக முக்கியமானதாகும். எமது ஒவ்வொரு திணைக்களத்தினதும் மற்றும் ஒவ்வொரு பணியாளரதும் அர்ப்பணிப்பே எமது வெற்றிக்கான சக்கரங்களும் சில்லுகளுமாகும். இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் நாம் சுமந்துள்ள மிகமுக்கிய முன்னுரிமையும் பொறுப்பும் யாதெனில் பல தலைமுறைகளாக மனித வாழ்க்கையை சிறப்பாகவும் நீண்ட ஆயுள்காலமுடையதாகவும் மாற்றுவதாகும். அதில் நாங்கள் சிறந்து விளங்குகின்றோம்.!