ஒரு பின்னோக்கிய பார்வை

அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின்  (SPMC) இந்த கீர்த்திமிக்க முன்னேற்றத்தின்  பின்னால் தூரநோக்குமிக்க முயற்சிகளதும்  ஆர்வத்துடன் கடந்து சென்ற பயணத்தினதும்   ஒரு முக்கிய வரலாறு உள்ளது.

 

 மறைந்த பேராசிரியர் சேனக பிபிலே மற்றும் டாக்டர் எஸ் ஏ விக்ரமசிங்கே ஆகியோரால் தயாரிக்கப்பட்ட  பிபிலே - விக்கிரமசிங்க அறிக்கையின் ஊடாக   அரச மருந்தாக்கல்  உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் அத்திவாரம் இடப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான, தொழிற்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய மருந்து உற்பத்தி அமைப்பொன்றை தாபிக்கும்  பணிக்காக அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் பேராசிரியர் சேனக பிபிலே மற்றும் டாக்டர் எஸ் ஏ விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியொன்றின் பெறுபேறாகவே அறிக்கை காணப்பட்டது.

 

1971 ஆம் ஆண்டில் அந்த அறிக்கையானது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் திட்டத்தின் முதற் கட்டமாக அத்தியாவசிய மருத்துவ மருந்துப் பொருட்களை  இறக்குமதி செய்யலானது. இரண்டாவது கட்டமாக நாட்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அத்தியாவசிய மருந்துகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

 

1985 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சு  அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான அமைப்பாக்க நிலையமொன்றை  தாபிப்பதற்கான பிரேரணையொன்றை  தயாரித்ததோடு, அது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையால் (JICA) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே முயற்சிகளின் உச்சமாகவும் இந்த முன்னெடுப்பின் ஸ்தாபகர்களின் கனவுகளின் அவாவாகவும் இருந்தது.

SPMC இன் செயல்பாடுகள்

The principal activities of the Corporation as mandated by the State industrial corporation ACT,NO.49 of 1957 are:

 

  • Manufacturing, processing, stocking, packing and re-packing of drugs
  • The provision of technical know-how of the above operations
  • Pharmacological and Pharmaceutical researches and the standardization of drugs and
  • Marketing of drugs so produced

 

 

The principal activities amended by the Gazette notification dated 2019.08.20 are:

  • Either by itself or by entering in to such Joint Venture, public-Private Partnership or other such agreement to manufacture, process, stock, pack or repack medicine
  • To create subsidiary companies.
  • To enter into International Agreement with potential investors.
  • To provide technical assistance for the manufacturing and processing of medicine.
  • To undertake pharmacological and pharmaceutical research and the standardization of medicine.
  • To market medicinal products produced by the Corporation or Joint Venture or other such agreements.